டெல்லியில் 144 தடை உத்தரவு!! பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!!

டெல்லியில் செங்கோட்டை அருகே குடிஉரிமைக்கு எதிராக பேரணியில் ஈடுபட அனுமதி மறுத்து , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்து, குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்ற பட்டுள்ளது .இதற்கு எதிராக வட மாநிலங்களான அசாம், திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதனை தொடர்ந்து மக்களும், எதிர்கட்சிகளும், பல்கலைகழக மாணவர்களும், இளைஞர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லியில் ஜாமியா பலக்லைக்கழக மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே போராட்டத்தின் போது வன்முறைவெடித்தது. இதனை தொடர்ந்து டெல்லி குரு கோவிந்த் சிங், இந்திரபிரஸ்தா பல்கலைகழக மாணவர்களும் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக லால் குயிலாவில் இருந்து ஷாகீத் பகத் சிங் பூங்கா நோக்கி காலை 11:30 மணியளவில் பேரணி நடத்த போவதாக தெரிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாண்டி ஹவுஸ் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி இன்று மதியம் 12 மணிக்கு பேரணி நடத்த போவதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்ததையடுத்து, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு, செங்கோட்டையருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி லஹாரி கேட், காஷ்மீர் கேட் மற்றும் கொத்வாலி காவல் நிலையம் ஆகிய பகுதிகளும் இதில் அடங்கும். எனவே அந்த இடங்களில் 4 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள் தடையை மீறி போராடுவோம் என தெரிவித்துள்ளனர்.