“டிக்கிலோனோ” படத்தில் 3 கதாபாத்திரத்தில் கலக்க போகும் சந்தானம்!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக தனெக்கென்று ஓவர் நகைச்சுவை பாணியில் தடம் பதித்தவர் நடிகர் சந்தானம் . ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்து வந்தார், பிறகு படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் ஹீரோவாகவும் இடம்பிடித்தார். இந்நிலையில் சந்தானம் தயாரித்து நடிக்கும் ”டிக்கிலோனோ ” திரைபடத்தில் மூன்று வேடங்களில் தான் நடிக்கபோவதாக சந்தானம் தெரிவித்தார் .
படத்தை பற்றி கூறிய சந்தானம்: ஒவ்வொரு நடிகருக்கும் அடுத்த கட்டம் என்பது நிச்சயமாக உள்ளது .நான் திரை உலகில் நகைச்சுவை நடிகனாக காலடி வைக்கும்போதே நான் அடுத்த கட்டத்தை நோக்கி நிச்சயமாக போவேன் என்ற திடமான நம்பிக்கை எனக்குள் இருந்தது. அதற்கு ஏற்றவாறு வாய்ப்புகளும் கிடைத்தது. அதை நான் தைரியமாக பயன்படுத்திக் கொண்டேன் .
” டிக்கிலோனோ” படத்தில் எனக்கு மூன்று வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹீரோ, வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகனாக தாம் நடிக்க போவதாகவும் அதில் நான் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார். எவ்வளவு வருடம் சினிமாவில் இருக்கிறோமோ அவ்வளவு வித விதமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கூறினார்.