“தவறே செய்யாத என்னை பதவிநீக்கம் செய்யும் முயற்சி நியாயமில்லை”, பிடியில் சிக்கிய ட்ரம்ப், வச்சி செய்யும் எதிர்க்கட்சி !!

ஒரு தவறும் செய்யாத தன்னை பதவிநீக்கம் செய்ய முயற்சிப்பது நியமல்ல என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்கட்சியினரை சாடியுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப், அடுத்து வரப்போகும் அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டிபோடுவார் என எண்ணப்படும் ஜோ பிடன் மீது உள்ள ஊழல் குற்றங்களை விசாரிக்குமாறு, உக்ரைன் அரசிடம் வேண்டுகோள் விடுத்ததாக அதிபர் ட்ரம்ப் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் டிரம்பை பதவிநீக்கம் செய்வதற்காக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. சமீபத்தில் பதவி விலக்கதிற்க்கான அந்த தீர்மானமானது தற்போது எதிர்கட்சியாக உள்ள ஜனநாயக கட்சி உறுப்பினர்களை அதிக பெரும்பான்மையாக கொண்டுள்ள பிரதிநிதிகளின் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்மனம் குறித்து அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், எந்த ஒரு தவறும் செய்யாத என்னை பதவிநீக்கம் செய்ய முயற்சிப்பது நியாயமல்ல, வெறுக்கத்தக்க கட்சியாக உருவெடுத்துள்ள ஜனநாயக கட்சியினர் நாட்டிற்கு தீங்கானவர்கள் என கடுமையாக சாடியுள்ளார்.
