அரிசி மாவு விற்கும் ஒலிம்பிக் வீரர்!! சொன்னதை செய்யாத அரசாங்கம்.

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாங்கத்தால், அரிசி மாவு விற்கும் நிலையில் உள்ள கேரளா விளையாட்டு வீரர்.
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் செருவத்தூரை சேர்ந்த இ.சுமேஷ் என்பவர், 2015ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், இந்திய கைப்பந்து அணியின் தலைவராக செயல்பட்டார். அந்த அணி அப்போது ஜப்பானை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது தனது வாழ்வாதாரத்திற்க்காக அரிசி மாவு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சுமேஷ் தலைமையில் இந்திய வென்று திரும்பும் போது அவருக்கும் அணிக்கும் பாராட்டுகள் குவிந்தது. அப்போது மாநில அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வெற்றி பெற்ற அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேலை வழங்கப்படும் என்றும், ரூ.20,000 ரொக்கம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அதுதொடர்பாக எந்த ஒரு அதிகாரியும் வேலையோ, வெகுமதியையோ தரவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.

சுமேஷ் கான்ஹான்காட்டில் உள்ள சிறப்பு பள்ளியில் படிக்கும் போதே பூ மலைகளை தயாரித்து விற்றார். அந்த அனுபவத்தை கொண்டு ஒலிம்பிக் வீரரான இவர் தற்போது அரிசி மாவு விற்கும் தொழிலில் ஈடுபட்டு சொந்த காலில் நின்று வாழ்க்கையை சமாளித்து வருகிறார். ஒரு ஒலிம்பிக் வீரர் இந்த நிலையில் இருப்பது இணைத்தளத்தில் பரவி வருகிறது. மேலும் அவருக்கு அரசுப்பணி வழங்கவேண்டுமெனவும் இணையதளத்தில் பலர் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு வேலை உறுதி என கூறி விளையாட்டை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. ஆனால் இதுபோன்று வாக்குறுதிகளை தவறுவதால் ஏழ்மையான வீரர்களின் பங்களிப்பும் ஆர்வமும் விளையாட்டின் மீது குறையும் நிலை ஏற்படவுள்ளது.