தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தன் ஒருவருட வருமானத்தை கொடுத்து உதவிய தயாரிப்பாளர் !!
இந்தியாவில் வேகமாக கொரோனா பரவி வருவதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வேலை இல்லாமல் கையில் காசு இல்லாமல் உண்ண உணவு இல்லாமல் பலபேர் தவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் கஷ்டப்படும் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
தற்போது பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகையுமான ஏக்தா கபூர் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தன்னுடைய ஒரு வருட சம்பளத்தை கொடுத்து உதவியுள்ளார். இதைப் பற்றி தெரிவித்த அவர் என்னுடைய ஓராண்டு சம்பளம் 2.5 கோடி தொகையை ஊரடங்கு காலகட்டத்தில் பாதித்த தொழிலாளர்களுக்கு வழங்குகிறேன் என தெரிவித்தார்.
இதற்கு முன்பு நடிகர் சல்மான் கான் பாலிவுட் திரையுலகின் 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்து உதவியுள்ளார். இந்தத் தொகையை அவர்களது வங்கி கணக்கில் அடுத்த மூன்று மாதத்திற்கு நேரடியாக செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.