வெளியே போகணும்னா மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும், அதிரடி உத்தரவு பிறப்பித்த கலெக்டர்

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அரசு உத்தரவிட்டது. பல மாநிலங்களில் மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே வரக் கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளது. மக்களின் நலனுக்காக அரசாங்கம் இந்த செயலை செய்துள்ளது ஆனால் மக்கள் பலர் மாஸ்க் ஏதும் அணியாமல் வெளியே சுற்றி திரிகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்திருக்கும் அறிக்கையில் வெளிநாடு வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கடந்த மாதம் விமானத்தில் பயணித்தவர்கள் கொரோனா அறிகுறிகள் இரும்பல், காய்ச்சல் இருந்தாலோ உடனடியாக சுகாதாரத் துறைக்கு அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மாறாக அதிகாரிகள் இருந்து சோதனை செய்யாமல் சிகிச்சை எடுக்காமல் உள்ள நபர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியான ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, மதுக்கரை, அன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் மாநகரில் சுந்தராபுரம், குனியமுத்தூர், பூமார்க்கெட் , ஆர்.எஸ் புதூர் மற்றும் பல இடங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் பொதுமக்கள் சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.