வாகன ஓட்டிகளே !! FASTAG இன்று முதல் கட்டாயம்: ஸ்டிக்கர் இல்லாதவர்களுக்கு இது தான் தண்டனை- மத்திய அரசு அதிரடி!!!

December 15, 2019 at 7:46 pm
pc

இன்று முதல் நாடு முழுவதும் உள்ள சுங்க சேவைகளில் FASTAG எனப்படும் மின்னணு வழி பணம் செலுத்தும் முறை அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுங்க சாவடிகளில் வாகன நெரிசலை தவிக்கவும், போக்குவரத்து விரைவாக மாற்றவும், FASTAG முறையில் சுங்கசாவடி கட்டணம் செலுத்தும் திட்டம் அனைத்து சுங்க சாவடிகளில் டிசம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தது ஆனால் வாகன ஓட்டிகள் இந்த திட்டத்திற்கு மாறுவதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி FASTAG கார்டை ஸ்டிக்கர் போல் வாகனங்களின் முன்புற கண்ணாடியில் ஓட்டவேண்டும். FASTAG முறையில் சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பு கம்பிக்கு மேல் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. வழித்தடத்தில் வாகனம் செல்லும் போது தடுப்புக்கம்பிக்கு மேல் உள்ள ஸ்கேனர், வாகனத்தில் உள்ள ஸ்டிக்கரை ஸ்கேன் செய்த சில வினாடிகளிலேயே சுங்க கட்டணத்தை ஆன்லைன் மூலம் எடுத்துக்கொள்ளும்.

இந்த ஸ்டிக்கர் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு இருமடங்காக கட்டணம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த FASTAG முறையை சில வங்கிகளில், வாகனத்தின் பதிவு சான்றிதழ், புகைப்படம் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து ரூ.100 ,ரூ.500 (வங்கிகளை பொறுத்து ) கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து ஸ்டிக்கரை பெற்று, google pay மூலம் FASTAG செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .அதில் 100 ரூபாய் முதல் சுமார் 1லட்சம் ரூபர் வரை ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம். இதன் மூலம் சுங்க சாவடிக்கட்டணம் எடுத்துகொள்ளபப்ட்டும். வசூலிக்கப்பட்ட கட்டணம் sms மூலம் தெரிவிக்கப்படும். இதனால் கட்டண தொகையை கையில் எடுத்து கொண்டு செல்லவேண்டிய அவசியம் இல்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website