“வெளிநாட்டு மக்கள் இந்தியாவிற்கு போகும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” உலக நாடுகள் வலியுறுத்தல் !!!

உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்கள் இந்தியாவிற்கு செல்வதாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்ற பட்டத்தை பல தரப்பினர் எதிர்த்து வந்தாலும் குறிப்பாக இந்தியாவின் வட மாநிலங்களில் அதற்கெதிரான போராட்டங்கள் பலமடங்காக வெடித்தன. அசாம், திரிபுராவில் மசோதாவுக்கு எதிராக கடும் போராட்டம் நிலவியது. இதனால் அசாமில் இணைய சேவைகள் முடக்கப்பட்டது, ரயில் சேவைகள் முடக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக உலக நாடுகளான, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் தங்களின் நாட்டு குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து பிரிட்டன் அரசு தங்களது மக்களிடம், நீங்கள் ஒருவேளை வடஇந்திய மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், எச்சரிக்கையாக இருங்கள். அப்பகுதியின் ஊடகங்கள் மற்றும் செய்திகளை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது . அதேபோல அமெரிக்க தூதரகமும் தங்களது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கனடா அரசு மக்களிடம், உங்கள் பயணம் குறித்து விமான நிறுவனம் அல்லது சுற்றுலாக் கழகத்தின் கருத்தை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என வலியுறுத்தியுள்ளது.

