“குடியுரிமை மசோதாவில் மற்ற நாடுகள் தலையிட வேண்டாம்”- பிரென்சு தூதர் வேண்டுகோள் !!

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மற்ற நாடுகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கவேண்டாம் என இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் அறிவுறித்தியுள்ளார்.
புதுசேரியில் மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் உதவியோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொழில்நுட்ப வசதிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விஷயம் காரணமாக புதுச்சேரி வந்த இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனெய்ன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சட்டப் பேரவையில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பற்றி பேசிய இம்மானுவேல், கூறியதாவது, “இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு”, இந்தியாவின் ஜனநாயக அமைப்பை பிரான்ஸ் மதிக்கிறது. மேலும் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மற்றும் குடிமக்கள் பதிவேடு போன்ற இந்தியாவின் அரசாங்கத்தில் நிலவும் இந்தியாவின் உள்நாட்டு விவாதங்களில் மற்ற நாட்டு அரசாங்கங்கள் தங்களது கருத்துகளை கூறுவதை தவிர்க்கவேண்டும். அத்துடன் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் விஷயத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
அதேபோல காஷ்மீர் பிரச்சனையில் அதில் தொடர்புடைய இரு நாடுகள் பேசி முடித்து கொள்ள இயலும். அந்த பிரச்சனையை சர்வதேசமயமாக்குவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என கூறினார்.