“வளர்ச்சியை நம்பி சந்தோஷப்பட்டால் அது ஜோக்” விஜய் சேதுபதியின் கருத்துக்கு காயத்ரி ரகுராம் ட்வீட் !!
மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது.
மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வருவான், மேல இருந்து ஒன்னும் வராது.
நோய் வந்தால் உறவினர்களே கூட தொட அச்சப்படுவார்கள். ஆனால் அவர்களை தொட்டு சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு நன்றி என கூறினார். “மேலும் மதத்தின் பெயரால் சண்டை போடுபவர்களா பற்றியும் பேசினார் விஜய் சேதுபதி.
சாமி பல கோடி வருடமாக உள்ளன. சாமி தன்னை காப்பாற்றிக்கொள்ளும். அதை மனிதன் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
சாமியை காப்பாற்றுகிறேன் என கூறும் கூட்டத்தோடு பழகாதீர்கள்” எனவும் விஜய் சேதுபதி பேசினார். விஜய் சேதுபதியின் இந்த கருத்துக்கு பிக் பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.பாஜக ஆதரவாளரான காயத்ரி தனது ட்விட்டரில் விஜய் சேதுபதி பற்றி கோபத்துடன் பேசியுள்ளார்.
“கடவுளை பின்பற்றாதவர்கள் மனதில் பல அழுக்குகளை வைத்திருப்பார்கள். மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பொய் சொல்வார்கள். அப்படி பட்ட மனிதர்களை நான் நம்பப்போவதில்லை” என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தற்போது இந்த கருத்து பல மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சிலர் விஜய் சேதுபதி தனது மனதில் பட்டதை நேர்மையாக நியாமாக கூறினார் என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் காயத்ரி ரகுராமின் ஆதரவாளர்கள் தங்கள் தரப்பு பற்றி தெரிவித்துவருகின்றனர்.