“சோதனை மேல் சோதனை”, சிறை செல்ல துணிந்த முதியவர் இதற்காக தானாம் !!! என்ன ஒரு புத்திசாலித்தனம் இவருக்கு !!

வேலையில்லாத காரணத்தாலும், தங்குவதற்கே வழியில்லாததாலும் சிறைக்கு செல்ல துணிந்த முதியவரின் செயல் ஜெர்மனி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டின் மோனோசென்க்ளாட்பாக் எனும் நகரை சேர்ந்த 62 வயது முதியவர் எபெர்ஹார்டு. இவர் கணினி ஆய்வாளராக இருந்தவர், சில மாதங்களுக்கு முன் தான் இவரது தனது வேலையை இழந்துள்ளார். பின்னர், தன்னுடைய சேமிப்பில் இருந்த பணத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றதன் மூலம் செலவழித்துள்ளார். வேலையும் இல்லாமல், சேமிப்புப்பணத்தையும் இழந்த இவர் தனது காரையே வீடாக பயன்படுத்தி வாழ்ந்துள்ளார். கடைசியில் வைத்திருந்த காரின் ஓட்டுநர் உரிமமும் காலாவதியாகிவிட்டது. இந்த நிலையில், விரக்தி அடைந்த இவர், கடந்த ஜூன் மாதம் காரை ஓட்டிச்சென்ற அவர் சைக்கிள்கள் செல்லும் பாதையில் சென்று சைக்கிளில் வந்த ஒரு நபரை வேகமாக காரால் மோதியுள்ளார். இதில் சைக்கிளில் வந்த நபர் பலத்த காயமடைந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் எபெர்ஹார்டுவை கைது செய்தனர்.

இவ்வழக்கில் அவருக்கு நீதிபதிகள் ஆயுள்தண்டனையை அளித்துள்ளனர். நீதிபதிகள் அளித்த தண்டனை உத்தரவில் “வேலை இல்லாததாலும், தங்குவதற்கும் இடமில்லாததாலும் எபர்ஹார்டு கடும் துயரத்தில் இருந்ததால் தவறு செய்து விட்டு சிறைக்கு சென்றால் அங்கு உணவு, உடை, இடம் எல்லாம் கிடைக்கும் என எண்ணி அதற்காக தான், சைக்கிளில் செல்லும் பாதையில் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்தார். இதை கேட்ட ஜெர்மனி மக்கள் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.