#CAA-க்கு எதிர்ப்பு: மாணவர் விசாவிற்கு எதிரானது, இந்தியாவை விட்டு உடனே வெளியேறு; ஜெர்மனி மாணவனுக்கு உத்தரவு !!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியதற்காக, இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்ட ஜெர்மனி மாணவன்.
மத்திய அரசால் நிறைவேற்ற பட்ட குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராடிவரும் நிலையில், சென்னையில் ஐ.ஐ.டியில் இயற்பியல் முதுகலை படிப்பு கற்று வருகிறார் ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் என்ற மாணவர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதில் அவர் ” we have been there,1933-1945″ என எழுதப்பட்ட பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை அப்போதைய ஹிட்லர் தலைமையிலான ஆட்சியோடு மறைமுகமாக ஒப்பிட்டதாக கூறப்படுகிறது. அது குறித்த விசாரணையில், அவர் இந்தியாவில் தங்கி படிப்பதற்கான அனுமதியை ரத்து செய்து மீண்டும் அவர் ஜெர்மனிக்கே செல்ல உத்தரவிட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஜேக்கப் தெரிவித்த போது, குடியுரிமை அதிகாரிகள் என்னை அழைத்து ஏன் போராட்டத்தில் கலந்து கொண்டீர்கள் என விசாரணை நடத்தினர். மேலும் மாணவர் விசாவில் வந்து படிக்கும் நான், படிக்க மட்டுமே இங்கு அனுமதி உள்ளது என்றும் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர்கள் கூறிய பிறகு தான் எனக்கு தெரியவந்தது, சென்னையில் குடியுரிமைக்கு எதிரான போராட்டம் அனுமதியில்லாமல் நடைபெற்று வருகிறது என்று, மாணவர் வீசாவில் வந்த நான் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது குற்றம் என்றும் தெரியவந்தது. அதனால் அவர்கள் என்னை இந்தியாவில் இருந்து வெளியேற சொன்னார்கள். அது தொடர்பாக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர் என தெரிவித்தார். இதனால் அவர் பாதி படிப்பை ஜெர்மனி சென்று தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரவை ஏற்று மாணவர் பெங்களூருவிற்கு சென்று அங்கிருந்து நேற்று ஜெர்மனிக்கு திரும்பினார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

