மாஸ்டர் படவிழா சம்பவம், சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்ட நடிகை !
கடந்த 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கௌரி கிஷன் மொத்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
ஒவொருவரின் பெயரை குறிப்பிட்டு பேசியபோது, தவறுதலாக நடிகர் சாந்தனுவை “சாந்தனு மேம்” என்று மேடையில் கூறிவிட்டார். அரங்கில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர். இதை சுதாரித்துக் கொண்ட கௌரி கிஷான் சாந்தனு சார் என்று உடனடியாக மாற்றிக் கூறினார்.
கௌரி கிஷனை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வந்தனர். இதனையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவில் சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் கௌரி.
விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் சிறுவயது த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் கௌரி கிஷன். இவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.