அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தில் திடீர் துப்பாக்கி சூடு 11 பேர் படுகாயம் – 2 பேர் கவலைக்கிடம் !!

அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவர் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் நியூ ஓர்லியன்ஸ் பிரெஞ்ச் குவார்ட்டர் பகுதியில் உள்ள கால்வாய் தெருவில் அமேரிக்கா நேரப்படி நேற்று அதிகாலையில் எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். எதிர்பாராத விதமாக நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டால் பரிதாபமாக அப்பாவி மக்கள் 11 படுகாயமடைந்துள்ளனர். மேலும் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.