மோசமாக பில்டிங் காரணமாக இந்தியா தோல்வியடைந்தது !வெஸ்ட் இண்டீஸ் பதிலடி !!!

பந்துவீச்சு மற்றும் பில்டிங் ரொம்ப மோசமாக இருந்ததால் வெஸ்ட் இண்டிஸ்யிடம் தோற்றது இந்தியா.
இந்திய – வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன இரண்டாவது T20 போட்டி இன்று திருவந்தபுரத்தில் கிரீன் பீல்ட் மைதானத்தில் நடந்துகொண்டிருக்கிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 என்னும் இலக்கை நிர்ணயித்தது. இந்தியாவின் ஷிவம் துபே 30 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்ஸர் அடித்து 54 ரன் குவித்தார், அவருக்கு ஈடாக ரிஷப பண்ட் நிதானமாக விளையாடி 22 பந்துகளில் 33 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேஷ்ரிக் வில்லியம்ஸ் 4 ஒவேரில் 30 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

இரண்டாவதாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடியது லெண்டேல் சிம்மோன்ஸ் அதிகபட்சமாக 45 பந்துகளில் 67 ரன் 4 பவுண்டரி 4 சிக்ஸர் அடித்தார். 18.3 ஓவர் முடிவில் 172 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.