விராட் கோலியின் அசுர தாண்டவம் !! 3வது T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி ! !

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இன்று மும்பை வாக்கெண்டே ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 240 ரன் குவித்தது. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது. அதிகபட்சமாக KL ராகுல் 56 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர் அடித்து 91 ரன் குவித்தார், ரோஹித் ஷர்மா 34 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸர் அடித்து 71 ரன் குவித்தார். கேப்டன் விராட் கோலி அசுர வேகத்தில் ரன் குவித்தார். 29 பந்துகளில் 4 பவுண்டரி 7 சிக்ஸர் விளாசி 70 ரன் குவித்தார். விராட் கோலி ஆட்டத்தை கண்டு அரங்கமே ஆர்ப்பரித்தது.

240 என்னும் கடினமான இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் ஏமாற்றத்துடன் வெளியேறினார் மறுமுனையில் பொல்லார்ட் சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார் 39 பந்துகளில் 68 ரன் குவித்தார். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 173 ரன் 8 விக்கெட் இழந்து இந்தியாவிடம் பரிதாபமாக தோற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது