இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு, இன்ஜினியரிங் முடித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் !!

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு, இன்ஜினியரிங் முடித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் !!
இந்திய ராணுவத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கு இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான பயிற்சி சென்னை (OTA) ஆபீசர் டிரெயினிங் அகாடமியில் அக்டோபர் 2020 முதல் அரபிக்கவுள்ளது.
SSC(Tech) பிரவுக்கு 55 ஆண்கள்
SSCW(Tech) பிரிவுக்கு 26 பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 27 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ராணுவத்தில் உயிரிழந்தவர்களின் மனைவியாக இருப்பின், 35 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SSCW (Non Tech) (Non UPSC) பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
SSCW (Tech) பிரிவில் சேர விரும்புகிறவர்கள், ஏதேனும் ஒரு துறையில் பி.இ, அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், 1 அக்டோபர் 2020 அன்று பி.இ தேர்ச்சிப் பெற்றதற்கான ஆதாரங்கள் வைத்திருக்க சமர்பிக்க வேண்டும். ராணுவ பயிற்சி தொடங்கி 12 வாரங்களுக்குள் இன்ஜினியரிங் முடித்த சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.
மேலே உள்ள பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் கொண்டவர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம்,
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தை அணுகவும்.