இத்தாலியில் இரண்டாம் உலக போரின் குண்டுகளை ரோபோ மூலம் செயலிழக்கப்பட்டது. 54,000 மக்கள் வெளியேற்றம் !!!

இத்தாலியில் 2ம் உலக போரின் போது வீசப்பட்ட குண்டுகளை செயலிழக்கும் பணி நடைபெற்றது, குண்டு இருக்கும் பகுதியில் இருந்து 54 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இத்தாலியின் பிருந்திசி நகரில் 1941-ம் ஆண்டு 2-ம் உலக போரின் போது பிரிட்டனால் வீசப்பட்ட குண்டு, அண்மையில் அங்குள்ள திரையரங்கத்தை சீரமைக்கும் பணியின் போது கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து 2-ம் உலக போரின் போது வீசப்பட்ட குண்டுகள் இன்னும் உள்ளதால், அதனை ரோபோட் மூலம் செயலிழக்கும் பணியில் இத்தாலி ராணுவ வீரர்கள் நேற்று குண்டுகளை செயலிழக்க செய்தனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிருந்திசி நகரில் குண்டு கிடக்கும் பகுதியில் இருந்து சுமார் 1617 மீட்டர் சுற்றளவு பகுதிகளில் வசிக்கும் 54 ஆயிரம் பேர் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவை மூடப்பட்டது.