கோலிவுட் குயின் காஜல் அகர்வாலின் வாழ்நாள் ஆசை!! ரசிகர்கள் குஷியில்…
தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து தனக்கென ரசிகர் பாட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்ட நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் பல முன்னணி ஹீரோவான விஜய்,அஜித் , சிரஞ்சீவி,பிரபாஸ் ஆகியோர் உடன் நடித்து வெற்றிக் கனியை கொடுத்துவர். ரசிகர்களுடன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் உரையாடலை வைத்துக்கொண்டிருப்பவர்.
இவர் 10 ஆண்டுகாலக ஹீரோயினாக இருந்து திரைப்படத்தில் நடித்து வெற்றியை பார்த்தவர். இந்நிலையில் இவர் 50 திரைப்படத்திற்கும் அதிகமாக நடித்து உள்ளார். மேலும் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இவையால் எப்பொழுதும் பிஸியாக இருக்கிறார். தற்போது ஹிந்தியில் நடித்துக்கொண்டு இருக்கும் இவர் 100 திரைபடத்தில் நடிப்பதே தன் இலட்சியம் என தெரிவித்தார்.
மேலும் இவர் கன்னட மொழியில் படம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்த்தக்கது. இதுகுறித்து பேசிய அவர் நடிகர் உபேந்திரா ஹீரோவாக நடிக்க இருக்கும் ” கப்சி ” என்ற கன்னட திரைபடத்தில் நடிக்க உள்ளதாக கூறினார். இப்படம் 7 மொழிகளில் வெளியிடப்பட போவதாக தகவலை தெரிவித்தார். இச்செய்தியால் காஜல் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.