பொண்ணு லவ் பண்ணா சுட்டு பொசுக்கிடுவார் என் புருஷன் !! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி !!
என் மகள் யாரையாவது காதலிப்பதாக கூறினால் என்னுடைய கணவர் அவளை துப்பாக்கியால் சுட்டு தள்ளிடுவார் என பிரபல நடிகை கஜோல் கூறிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் மிக முக்கிய பிரபலமாக இருப்பவர் நடிகை கஜோல். இவர் தமிழில் ‘மின்சார கனவு’ படத்தின் நடித்ததன் மூலம் தன் அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர். சமீபத்தில் நடிகர் தனுஷின் ‘ VIP-2’ படத்தின் மூலம் தமிழில் ரீஎண்டரி கொடுத்தார். அவர் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைசா என்ற 20வயது மகளும், யூத் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை கஜோல் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எனது குடும்பம் மிகவும் சிறிய மகிழ்ச்சியான குடும்பம். எனது கணவரும் குழந்தைகளும் தான் எனது உலகமே. நான் எனது குழந்தைகளை அவ்வளவாக கண்டிக்கமாட்டேன் என் குழந்தைகள் என் கணவருக்குத்தான் அதிகம் பயப்படுவார்கள்.
அவர் என்னைப்போல அல்லாமல் குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்வார். எந்த அளவுக்கு என்றால், ஒருவேளை என் மகள் யாரையாவது காதலிப்பதாக கூறினால் அவளை துப்பாக்கி எடுத்து சுட்டுத்தள்ளி விடுவார் அந்த அளவிற்கு குழந்தைகளிடம் கண்டிப்பாக இருப்பார். அதனாலேயே என் மகளும் மகனும் என்ன செய்தாலும் மறைக்காமல் என்னிடம் சொல்லிவிடுவார்கள் என தெரிவித்துள்ளார். இவரின் பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம் செய்த இவர்களே இப்படி காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.