ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத், அப்துல் கலாம் நினைவு இடத்திற்கு சென்று வணங்கினார் !!
பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேடத்தில் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார், A.L விஜய் தலைவி என்கிற பெயரில் படமாக எடுத்து வருகிறார். தமிழகத்தில் உள்ள கங்கனா ரணாவத் மகா சிவராத்திரி அன்று கோவையில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்திற்கு சென்று வழிபட்டார். இதையடுத்து அவர் இன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் சிவனை தரிசனம் செய்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு சென்று கங்கனா ரணாவத் மரியாதை செய்தார். அங்கு எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தலைவி படத்திற்காக, உடல் எடையை அதிகரித்துள்ள கங்கனா பரதமும் கற்றுள்ளார். இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு எம்.ஜி.ஆர். கதாபாத்திரம் கட்சிதமாக உள்ளது. கங்கனாவின் போட்டோக்களை பார்த்தால் ஜெயலலிதா லுக்கை போன்று தோன்றவில்லை என பல கமெண்ட் செய்துவருகின்றனர், மறுபுறம் அரவிந்த் ஸ்வாமியை பாராட்டியுள்ளனர்.