கனிகாவுக்கு தணிந்த கொரோனா…பெரு மூச்சு விடும் கனிகா கபூர் !!
பாலிவுட் பாடகி கனிகா கபூர் கடந்த மாதம் 9-ம் தேதி லண்டனிலிருந்து மும்பை வந்தார். பிறகு அவர் லக்னோவில் முக்கிய அரசியல்வாதிகள் பங்கேற்ற ஒரு விருந்தில் கனிகா கலந்து கொண்டார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் தனது சொந்த ஊரான லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்தடுத்த கொரோனா சோதனையில் கொரோனா மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் தனி வார்டில் இருந்த கனிகா மருத்துவமனை சரியாக இல்லை குறை கூறினர். அவருக்கு 4 முறை மாதிரி எடுத்து சோதனை செய்ததில் பொசிட்டிவ் ரிசல்ட் வந்தது. ஏப்ரல் 4-ஆம் தேதி 5வது முறையாகப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்தது. அவர் தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.