“பேபி டால்” கனிகா கபூரை கழுவி ஊத்தும் ரசிகர்கள்…இது தேவைதான் உனக்கு !!
கொரோனா பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவையும் பின்பற்றாமல் ஹோலி பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளில் பாடகி கனிகா கபூர் பல விருந்துகளிலும் கலந்து கொண்டார். கடந்த 15-ம் தேதி பாலிவுட் பாடகி கனிகா கபூர் லண்டனில் இருந்து விமானம் மூலம் லக்னோ வந்துள்ளார் என்பது தெரியவந்தது. விமானநிலையத்தில் கட்டுப்பாட்டை மீறி சென்றுள்ளார்.
தற்போது கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க எம்.பி துஷ்யந் சிங், இரண்டு நாள்களாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளார். குடியரசுத் தலைவர் ராஜ்நாத் சிங் ஏற்பாடு செய்த நிகழ்விலும் கலந்துகொண்டார். அந்த பார்ட்டியில் கலந்துகொடவர்களும் அச்சத்தில் உள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் கனிகா கபூரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்வளவு பெரிய கொடிய நோயை அலட்சியப்படுத்தி பார்ட்டியில் கலந்து கொண்டு ஆட்டம் போட அவசியம் என்ன ?? பொறுப்பற்ற செயலை கண்டிக்க வேண்டும் என பலர் குரல் எழுப்பி வருகின்றனர். அதில் சிலர் இவர்கள் பெயர் காசுக்காக பார்ட்டியில் நாட்டை பற்றிய அக்கறையில்லாமல் நடந்து கொள்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் இந்திய அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.