5 மிருகங்களில் ஒன்று மட்டும் தப்பித்துவிட்டது – நடிகை கஸ்தூரி ஆவேசம்
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு குற்றவாளிகளில் நான்கு பேர் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.
குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றியதை நாடே கொண்டாடி வருகிறது. நிர்பயாவின் ஆன்மா இன்று தான் சாந்தியடையும் என்று சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். தன் மகளின் ஆன்மா சாந்தியடைந்ததாக மனநிறைவுடன் தயார் காணப்பட்டார்.
நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நிர்பயா வழக்கில் கடைசியாக ஒருவழியாக மனித மிருகங்கள் நால்வருக்கு தண்டனை கிடைத்துவிட்டது. இதில் ஒருவர் மட்டும் சட்டத்தின் ஓட்டைகள் மூலம் தப்பித்துவிட்டார். அவன் கொரோனா வைரஸ் அல்லது பேருந்து விபத்து சிக்கி மரணம் அடைவான் என்று நம்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
நிர்பயா குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பதும், இன்னொரு குற்றவாளி 18 வயது கீழ் உள்ள மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தண்டனை பெற்று விடுதலை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.