தனது பெற்றோர் முன் தேசிய விருதுடன், பாரம்பரிய உடையில் மேடையில் ஜொலித்த கீர்த்தி சுரேஷ் !!
மகாநதி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை துணைக் குடியரசு தலைவர் கையால் வாங்கிய கீர்த்தி சுரேஷ், மேடையில் புடவையில் ஜொலித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர். மேலும் அவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் ஏராளமான மொழிகளில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைத்து நடித்த ரஜினிமுருகன், ரெமோ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அவர் விஜய், விகாரம் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். அவ்வளவாக கவர்ச்சி ஏதும் காட்டாமல் தனது திறமையை நிரூபிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது . சமீபத்தில் இவர், 2018 ம் ஆண்டு அமைந்த மாபெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான “மகாநதி” படத்தில் நடித்தார். தமிழில் இந்த படம் “நடிகையர் திலகம்” என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் அவரின் இயல்பான, திறமையான நடித்த நடிப்பு பலராலும் பேசப்பட்டது. இந்த படத்தில் இவர் ஒப்புதல் ஆனதும் பலர் இவரை விமர்ச்சித்தர்கள் முகபாவனையே சரியில்லாமல், சும்மா சிரித்து படத்தை ஒட்டும் இவர் எப்படி அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியும் என கேலி செய்தனர்.
மேலும் இவரின் புகைப்படத்தை வைத்து மீம் கிரியேட்டர்களும் முகபாவனையை கலாய்த்து வந்தனர். அந்தநிலையில் அவரின் மகாநதி திரைப்படம் அனைவருக்கும் பதிலடி கொடுத்தது. சாவித்ரியையே கண்முன் கொண்டுவந்த கீர்த்திசுரேஷ் அந்த படத்திற்காக சிறந்த நடிகைகான பிலிம்பேர் விருது வாங்கினார். இந்நிலையில் அவருக்கு மகாநதி படத்திற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதை பெற்றுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 66வது தேசிய விருது வழங்கும் விழாவில், பாரம்பரிய உடையான புடவையில் தலையில் மல்லிகை பூவுடன் பேரழகாய், மேடையில் சென்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் கையால் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். பின்னர் அவர் துணைக் குடியரசு தலைவரின் கால்களில் விழுந்து ஆசிபெற்றார். தற்போது இந்த வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. இதனால் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியுள்ளனர். கீர்த்தி தற்போது முதன் முதலாக “மைதான்” எனும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168 வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.