சரிந்த ஆஸ்திரேலியாவின் ஸ்மித் ! டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி முதல் இடத்தை மீண்டும் பிடித்தார்.

பாகிஸ்தான்னுக்கு எதிராக நடத்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் சரியாக விளையாடாததால் ICC டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஸ்டீவன் ஸ்மித் 4 டெஸ்ட் போட்டியில் 774 குவித்து சிறப்பாக செயல்பட்டிருந்த ஸ்மித் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்துள்ளார்.
தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பங்களாதேஷ்க்கு எதிராக ஈடன் கர்டெனில் நடந்த இரவு பகல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சதம் அடித்தார். இதன் மூலம் ஸ்டீவன் ஸ்மித்தை இரண்டாவது இடத்துக்கு தள்ளி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.