3 வயது மகளுக்கு கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றிய தாய், ஆண் நண்பருடன் தனிமையில் செய்த கொடூர செயல் !!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் பகுதியை சேர்ந்த நந்தினி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக 3 வது மகள் நாயனாஸ்ரீ உடன் வாழ்ந்து வருகிறார். அதே இடத்தை சேர்ந்த அசோகன் என்ற இளைஞருடன் நந்தினிக்கு பழக்கம் உண்டானது, நாளடைவில் இது கள்ள காதலாகவும் மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழக்கம் அதிகமானது.நந்தினியை அசோகன் மது பழக்கத்திற்கு அடிமை படுத்தி உல்லாசம் அனுபவித்தார் என கூறப்படுகிறது.
நந்தினி தனது வீட்டில் அசோகனுடன் மது அருந்தியதில் போதை தலைக்கு ஏறியதால். இவ்விருவர் உறவுக்கு இடையூறாக இருப்பதால் ஆத்திரத்தில் மகள் நயனாஸ்ரீ-க்கு தூங்கவைப்பதற்கு கட்டாயப்படுத்தி மதுவை வாயில் ஊற்றி தாறுமாறாக அடித்துள்ளார். இந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து குழந்தையை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதோடு குழந்தையை அருகில் இருந்த பாகலூர் சுகாதார மையத்தில் சிகிச்சைகாக கொண்டு சென்றனர். மேலும் குழந்தை ரத்தவாந்தி எடுத்ததால் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை காக அனுமதித்தனர்.
போலீசார் நந்தினி மற்றும் அவருடன் தனியாக உல்லாசமாக இருந்த ஆண் நண்பர் அசோகன் ஆகிய இருவரையும் பிடித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.