ஸ்காட்லாந்து ஓபன் பேட்மிட்டன்: சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்தியாவின் லக்ஷ்சயா சென்

ஸ்காட்லாந்து சர்வதேச ஓபன் பேட்மிட்டன் கிளாஸ்க்கோ நகரில் நடைபெற்றது, பல்வேறு நாட்டிலிருந்து முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்த்த 18 வயது நிரம்பிய லக்ஷ்சயா சென் சிறப்பாக செயல்ப்பட்டு இறுதி போட்டிற்கு முன்னேறினார். இறுதி போட்டியில் பிரேசில் வீரர் யுகோர் கோல்ஹோவை எதிர்கொண்டார். 56 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்சயா சென் 18-21, 21-18, 21-19 செட் கணக்கில் யுகோர் கோல்ஹோவை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

லக்ஷ்சயா சென் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்த 3 மாதத்தில் 4 பட்டங்களை வென்றுள்ளார். சார்லொஸ் ஓபன், டச் ஓபன், பெல்ஜியன் ஓபன் தற்போது ஸ்காட்லாந்து தொடர்ச்சியாக வென்றுள்ளார். லக்ஷ்சயா சென்- க்கு இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் குவிகிறது.