வந்துட்டார்யா வந்துட்டார் !!!! சரவணா ஸ்டோர்ஸ் புகழ் “லெஜெண்ட் சரவணன்” படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் !!
படத்திற்காக பிரம்மாண்டமாய் ஹை-டெக் தொழிற்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ளார்கள்.
சரவணா ஸ்டோர்ஸ் புகழ் லெஜெண்ட் சரவணன், தற்போது கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அவர் தயாரித்து நடிக்கும் படத்தின் பெயர் “ப்ரொடக்சன் நோ 1” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அறிமுக கதாநாயகி கீத்திகா திவாரி நடிக்க உள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தி பிரபு, விவேக், மயில்சாமி, தம்பி ராமையா போன்றவர்கள் நடிக்க இருக்கிறார்கள்.
படத்தின் பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுத ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். வசனங்கள் பட்டுக்கோட்டை பிரபாகரன் எழுத, ஜே.டி ஜெரி இயக்குகிறார். லெஜெண்ட் சரவணன் தனது புது முயற்சியாக சினிமாவில் கால்பதித்து இதிலும் தனது வியாபாரத்தை போன்று சினிமாவிலும் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.