சினிமாவுக்கு முன்னாடி என்ன செய்துகொண்டிருந்தார் தளபதி விஜய்யின் இயக்குனர்..? வியக்க வைக்கும் அவரது பின்னணி
1986 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் லோகேஷ் கனகராஜ் பிறந்தார். சாதாரணமான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் முதலில் வேலை செய்தது ஒரு வங்கியில் தான். அப்படி இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவரது அலுவலகத்தில் நடந்த குறும்பட போட்டியில் இவர் கலந்துகொள்ள, இவரது படம் முதல் பரிசை வென்றார். அந்த ஊக்கத்தில் தான் அவருக்கு சினிமா ஆசை எட்டி பார்த்துள்ளது.
பேங்க் வேலையில் இருந்து கொண்டே வார இறுதிகளில் குறும்படம் எடுத்தார். அதில் ‘களம்’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்க, தன் குறும்பட நண்பர்கள் உதவியுடன் முழு நேர சினிமா வேளையில் இறங்கினார். திருமணமாகி, ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
உதவி இயக்குனராகவும் பணியாற்றிய போது அவர் அவமானங்களை சந்தித்ததாகவும் ஆனால் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டதே தனது வெற்றிக்கு காரணம் என்றும் கூறுகிறார். முதல் திரைப்படமான ‘ மாநகரம்’ படம் நடிகர்கள் ஸ்ரீ, சந்தீப் மற்றும் ரெஜினா ஆகியோரது வெளியாகி வெகுவாக பாராட்டப்பட்டது. உடனே அவசரத்தில் அடுத்த படத்தை இயக்காமல், பொறுமையாக ஒரு வருட டைம் எடுத்து தனது அடுத்த கதையை தயார் செய்தார் லோகேஷ். கைதி அனைவரையும் கட்டி போட்டது.
கமல் ஹாசனின் தீவிர ரசிகரான இவர் பிகில் படம் வெளியான அதே தேதியில் கைதியை வெளியிட்டார். கமல் ஹாசனின் ரசிகன் அல்லவா.. போட்டினு வந்தவுடன் களம் இறங்கிட்டார். இந்த தைரியம் தளபதிக்கு பிடித்ததோ என்னவோ மாஸ்டர் படம் இயக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. தளபதியின் பெருந்தன்மை அடக்கம் லோகேஷ் கனகராஜின் உழைப்பு “மாஸ்டர் கிளாஸ்” கூட்டணி.