“5 சவரன் நகைக்காக, மூதாட்டியின் கழுத்தறுத்து கொடூர கொலை” மதுரையில் நடந்த கோரசம்பவம்!!
மதுரை அருகே 5 சவரன் நகைக்கு ஆசை பட்டு, மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொன்ற நபர், போலீசில் சிக்கினார்.
மதுரை அருகே திருமங்கலம் அன்னகாமு தோட்டத்தில் வசித்துவரும் 55 வயதான காவேரி அம்மாள் என்ற மூதாட்டி வீட்டிலேயே பெட்டிக்கடை போட்டு நடத்தி வருகிறார். அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் காதர் பாஷா ஒளி என்ற நபர் நேற்று காவேரி அம்மாள் வீட்டிற்குள் புகுந்து அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் மதிப்புள்ள நகையை பறிக்க முயன்று இருக்கிறார். அவனை தடுக்க முயன்ற காவேரி அம்மாளை , அந்த நபர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக தாக்கி கழுத்தில் வெட்டியுள்ளான். இதனால் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கும் போது அவர்களை காதர் பாஷா தன்னிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளான். மேலும் காவேரி அம்மாள் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தீ வைக்க முயன்றுள்ளான். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கேஸ் சிலிண்டரை மூடி, அவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.