இன்று மார்ச் 13 வெளியாகும் படங்களின் என்னென்ன
இந்த வாரம் தமிழ் திரையுலகில் மார்ச் 13ஆம் தேதி வெளியாகும் அசுரகுரு, தாராள பிரபு, வால்டர், கயிறு, எனக்கு ஒன்னு தெரிஞ்சு ஆகணும், தஞ்சமடா நீ எனக்கு, ரகசிய போலீஸ் ஆகிய படங்கள் வெளியாகிறது. இந்த வாரம் பெரிய முன்னணி நட்சத்தரங்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது நாளை வெளியாகும் படங்களில் பெருபாலான தியேட்டர்களில் திரைக்கு வருகிறது.
விக்ரம் பிரபு நடிப்பில் அசுரகுரு, சிபிராஜ் போலீசாக வால்டர் படத்தில் நடிக்கிறார், தாராள பிரபு படத்தில் ஹரிஷ் கல்யாண் துடிப்பான இளைஞராக நடிக்கிறார்.
ரயில் கொள்ளையை மையப்படுத்திய படம் என்பதால், இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படத்தில் விக்ரம் பிரபு, யோகி பாபு, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜதீப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கணேஷ் ராகவேந்திரா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வால்டர் படம் குழந்தைகள் கடத்தப்படும் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சிபி சத்யராஜ், ஷிரின் காஞ்வாலா, சமுத்திரக்கனி, நட்டி என்ற நடராஜ், சனம் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
அன்பரசன் வால்டர் படத்தை இயக்கியுள்ளார். சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
தாராள பிரபு படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக், தன்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ளனர். கிருஷ்ண மாரிமுத்து தாராள பிரபு படத்தை இயக்கியுள்ளார். விந்து தானம் செய்யபடுவதையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபு, சிபிராஜ், ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்கு மட்டும் இன்றைய நாளில் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று படங்களுக்கு இடையே போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கயிறு, எனக்கு ஒன்னு தெரிஞ்சு ஆகணும், ரகசிய போலீஸ், தஞ்சமடா நீ எனக்கு ஆகிய படங்களும் ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.