“70 கோடி கிறிஸ்துமஸ் போனஸ்” ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி !!

அமெரிக்க நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை போனஸாக அறிவித்து ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் மேரிலாந்தை தலையிடமாக கொண்ட, செயின்ட் ஜான் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எட்வர்ட் செயின்ட் ஜான் என்பவர் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தன்னிடம் வேலை செய்யும் 200 ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை (10 மில்லியன் பவுண்ட்) போனஸாக அறிவித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் சாதனைகள் குறித்த விழாவில் அவர் இந்த அறிவிப்பை அறிவித்தது மட்டுமல்லாமல், அந்த நிகழ்ச்சியிலேயே சில ஊழியர்களுக்கு ரூ.35 லட்சத்தை போனஸாக வழங்கியுள்ளார். தொடர்ந்து மற்ற ஊழியர்களுக்கும் வழங்கப்பட உள்ளார்.

இதனால் சந்தோஷத்தில் திளைத்த ஊழியர்கள் எங்கள் வாழ்க்கையின் மாற்றத்திற்கு இந்த நிறுவனம் உதவும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பேசிய நிறுவன உரிமையாளர் ஜான், எங்கள் நிறுவனத்தில் தங்களின் கடின உழைப்பையும். தங்களின் அர்ப்பணிப்பையும் தந்த ஊழியர்களுக்கு எனது நன்றியை காட்ட இதை விட சிறந்த வழி இல்லை, எனவும் அவர்கள் இல்லாமல் இந்த நிறுவனமே இல்லை எனவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

