விஜயின் மாஸ்டர் படத்தில், தமிழ்ல்ல ஒரு குட்டி கதைன்னு சொல்லி ஆங்கில பாடலா !! அடடா நல்லா இருக்கே இது !!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணையும் மாஸ்டர் படத்தின் முதல் பாடல், வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சமீபத்தில் பாடல் வரிகள் முழுக்க ஆங்கிலத்தில் இருப்பதால், தமிழ் வார்த்தைகளை கவனமாக தேட வேண்டியுள்ளது. இன்று பிப்.,14 ஆம் தேதி முதல் பாடல் வெளியாகும் உங்கள் ஹெட் போனஸ் மற்றும் ஸ்பீக்கர்களை வைத்து கொண்டு ரெடியாக இருங்கள் என படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அனிருத் இசையில், விஜய் பாடியிருக்கும் இந்த ஒரு குட்டி கதை பாடலை வெளியாகி பல லட்ச பார்வையாளர்களை கவர்ந்தது. விஜய்யின் ஒரு கார்ட்டூன் பொம்மை நடனம் ஆடுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பலரை கவர்ந்துள்ளது. படத்தின் பாடல் வரிகளை அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார். படத்தின் பாடல் வரிகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் கேட்பதற்கு நன்றாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.