முடிஞ்சுது மாஸ்டர்… ரிலீஸ் தேதியை இசை அமைப்பாளர் அனிருத் அறிவித்தார்.
விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கள் “குட்டி ஸ்டோரி” பாடல் யூடியூபில் 27 மில்லியன்னை கடந்துள்ளது .
சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தது. படத்தின் இயக்குனர் தனது படகுழுவொடு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார். மேலும் தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என ட்விட்டரில் கூறியிருந்தார் இயக்குனர் லோகேஷ்.
ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அடுத்து டப்பிங் உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.
மாநகரம், கைதி என இரண்டு படங்கள் பிறகு இவருக்கு ஜாக்பாட் வாய்ப்பாக அமைந்தது மாஸ்டர் படம்.
தற்போது இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் ரிலீஸ் என்பதை உறுதி படுத்தியுள்ளார். பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
இசை வெளியிட்டு விழா பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த முறை சர்க்கார், பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரசிகர்கள் மற்றும் போலீஸ் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் இந்த முறை ரகசியமாக நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.