ஆஸ்காரை ஓரங்கட்டிய தளபதி விஜய்யின் “மாஸ்டர்”.., இது என்ன அரசியல் மாநாடா..? தளபதி வெறியர்கள் மாநாடா ?
தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்துவருகிறது. பொங்கல் பண்டிகை முடிந்ததிலிருந்து நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய்க்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அமைதியாக நடந்த படப்பிடிப்பு தற்போது வருமான வரித்துறையின் செய்திக்கு பிறகு பலருக்கு விஜய் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலி தான் நடக்கிறது என தெரியவந்தது. இதனால் தளபதி விஜய்யை காண பல மாவட்டங்களிலிருந்து நெய்வேலி படப்பிடிப்பு தளத்திற்கு படையெடுத்துள்ளனர். இதனால் நெய்வேலி முற்றிலும் ஸ்தம்பித்தது. அரசியல் மாநாடா ? என வியக்க வைக்கும் அளவுக்கு கூட்டம் அலைமோதியது. இதில் விஜய் ஒரு வேண் மீது ஏறி தனது போனில் செலஃபி எடுத்துக்கொண்டார். மேலும் அதை ட்விட்டரில் பதிவிட்ட சில மணி நேரத்தில் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.