ஐயப்ப பக்தருக்கு கட்டுபோடும் இஸ்லாமிய பெண்!! “மதங்களை கடந்த மனிதநேயம்” இதுபோதும் !!

தங்களை மையமாக வைத்து ஒரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டிருக்க, மதம் என்னடா மதம், மனிதம் எப்போதும் நிலைத்து நிற்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக கேரளாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் அந்த புகைப்படத்தை பார்த்தாலே போதும் புரிந்துவிடும்.
சபரிமலை செல்லும் மாதம் என்பதால் தற்போது ஐயப்ப சுவாமியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேரளாவிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கேரளாவின் தலைநகரான திருவனத்தபுரத்தில் உள்ள கிழ்க்கோட்டையில் இருக்கும் புகழ் பெற்ற பத்மநாப சாமி கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்று ஐயப்ப பக்தர் ஒருவர் தனது மகனுடன் அந்த கோவிலுக்கு சுவாமியை தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரது கால் நடைபாதையில் உள்ள சிலாப் கல் ஒன்றில் மோதியது. இதனால் காலில் காயம் ஏற்படவே வலிதாங்காமல் கீழே உட்கார்ந்து விட்டார். இதை பார்த்த மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற வேளையில், அப்பகுதி வழியாக தனது தோழிகளுடன் வந்த இஸ்லாமிய பெண் அவரை கண்டவுடன் கடையில் இருந்து தண்ணீர் வாங்கி அவரது காலில் ஊற்றி கழுவினார். பின்னர் மருந்து கடையில் இருந்து மருந்து வாங்கி அவரது காலில் கட்டுப்போட்டு விட்டார்.

இந்தியாவில் முஸ்லீம் மதத்தினரை மையமாக கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவுக்கு முஸ்லீம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் போராடுவதும் மூலமாக மதப்பிரிவினை இல்லை என்று நிரூபித்திருக்கின்றனர் மக்கள். அதேபோல இந்த இஸ்லாமிய பெண் செய்த இந்த செயலால் மனிதம் மதத்தினை தாண்டியது என மேலும் நிரூபித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.