நாகர்கோவிலில் +2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி !!

நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பள்ளி குழதைகள் வேலை செய்யும் பெண்கள் என பலபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி சந்திக்கும் நபர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஞாயிற்றுகிழமை அன்று நாகர்கோவிலில் உள்ள இடலாக்குடியில் அரசு பள்ளியில் +2 படிக்கும் மாணவி ஒருவரை, விடுமுறை தினத்திலும் ஸ்பெஷல் கிளாஸ் வரும்படி தற்காலிக அரசு பள்ளி ஆசிரியரான சுரேஷ் அழைத்திருக்கிறார்.

+2 பொது தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் நேரம் என்பதால், தனது வீட்டில் ஸ்பெஷல் கிளாஸ் செல்வதாக கூறி பள்ளிக்கு சென்றார். ஆசிரியர் சுரேஷ் அந்த மாணவியை தனியாக அழைத்து சென்று வகுப்பறையில் வலுக்கட்டாயமாக பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். மாணவி அலறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடியுள்ளார். மாணவி அழுது கொண்டு ஓடுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி சுரேஷ்-ஐ போலீஸிடம் ஒப்படைத்தனர். அப்போது கூடியிருந்த மக்கள் சரமாரியாக போலீஸ் முன்பு சுரேஷ் தாக்கப்பட்டார். பின்னர் இருசக்கர வாகனத்தில் காவல் நிலாயத்திற்கு கொண்டுசென்றனர். பொதுமக்கள் ஆசிரியர் சுரேஷை தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.