ஹாய் ஐட்டம்.., என்று அழைத்தவரை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகை
அஜித் நடித்த பில்லா, விஜய் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான நடிகை நமீதாவை சமூக வலைத்தளம் மூலம் நெட்டிசன் ஒருவர் மிரட்டியுள்ளார்.
கவர்ச்சிக்கு பெயர் போனவர் நமீதா. ஒரு கட்டத்திற்கு மேல் உடல் பருமன் அதிகரித்து ரசிகர்களால் ரசிக்க படாத நாயகியாக ஓரம் கட்டப்பட்டார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அரசியலிலும் இணைந்தார்.
நமீதாவை ஆபாச படங்களில் பார்த்ததாகவும், அந்த படங்களை வெளியிட போவதாகவும், நமீதாவின் சமூக வலைத்தள பக்கத்தை ஹேக் செய்து அதில் ஆபாச பதிவுகளை பதிவிடவுள்ளதாகவும் அந்த நபர் நமீதாவை மிரட்டியுள்ளார்.
பின்னர் தன்னுடைய அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து உங்களுக்கு தவறான மெசேஜ் அனுப்பி விட்டார்கள் என கூறினாராம் அந்த ரசிகர். இதற்கு பதிலடி கொடுத்த நமிதா, ‘முடிந்தால் செய்து கொள்’ என்று பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி மிரட்டிய நபரின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு, இவர் போன்ற பெண்களை மதிக்க தெரியாதவர்களை சரியாக தண்டிக்க வேண்டும் என்றும், தன்னை அந்த நபர் ‘ஐட்டம்’ என்றே அழைத்து வருவதாகவும், பெண்கள் குறித்து இவர்கள் என்ன நினைத்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார்.
நமிதாவின் இந்த பதிவு தீயாய் பரவி வருகின்றது.