2020-ல கண்டிப்பா இந்த நடிகை வேற லெவெல்க்கு போகப்போறாங்க !
எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நந்திதா சுவேதா. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பிங்க் புடவையோடு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகின்றன. இதனால் நந்திதா சுவேதாவின் பேன் பலோவ்ர்ஸ் அதிகமாகியுள்ளது.
இவர் இப்போது சிபிராஜ் உடன் “கபடதாரி” என்னும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். பூஜா குமார், நாசர், ஜெயப்ரகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் திரைகதை மற்றும் வசனத்தை ஜான் மஹேந்திரன், ஜி. தனஞ்சயன் ஆகிய இருவரும் எழுதியிருக்கிறார்கள். படத்தை லலிதா தனஞ்சயன் தயாரிகிறார். கடந்த 1-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை படப்பிடிப்பு நடைபெறும்.
இந்த படத்தின் மூலம் நந்திதா 2020-இல் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது