குமுதா நீயும் இப்ப ஹிந்தி பாட்டுக்கு டிக்-டாக் பண்ண ஆரம்பிச்சிட்டியா…
தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் தினேஷ் நடிப்பில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா சுவேதா. அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் போன்றபடங்கள் இவருக்கு கைகொடுத்தது.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தில் ‘குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ என்று விஜய் சேதுபதி நந்திதாவை குறிப்பிடும் வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. அதன் பிறகு வெளிவந்த படங்கள் அவ்வளவு வெற்றியை பெறவில்லை எனினும் எப்போதும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் . தனியாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் தான் படப்பிடிப்பின் போது செய்யும் சேட்டைகளை பதிவிட்டுவருகிறார். அதுமட்டுமல்லாது அடிக்கடி தனது அசத்தல் புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.
சம்பத்தில் அவர் வெளியிட ஹிந்தி பாடலின் டிக் டாக் வீடியோ வெளிவந்துள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர். அதிலும் குமுதாவுக்கு ஹிந்தி படத்துல நடிக்க ஆசை வந்துடுச்சு டோய் என விரக்தியில் உள்ளனர். அங்க போனா கொஞ்சம் அதிக கிளாமர் தேவைப்படும் என்பதாலோ இவர் இப்படி மாறிவிட்டார் என சில கிசு கிசுகின்றனர்.