சுட்டெரிக்கும் சூரியனில் ஆய்வு !! விண்கலம் கொண்டுவந்த ஆச்சரிய தகவல்.. சூரிய காற்றா… தெரிஞ்சிக்கணுமா ?

சூரியனை ஆய்வு செய்ய சென்ற விண்கலம் சூரிய காற்றை பற்றி புதிய தகவல்களை கொண்டுவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவிற்கு பல நாடுகளும் பல ஆய்வுகளை மேற்கொண்டவண்ணம் உள்ளது. இருப்பினும் பூமியில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ள சூரியனை ,முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடத்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க சென்ற இந்த விண்கலம் சூரியனுக்கு 15 மில்லியன் மைல்( 24 மில்லயன் கி.மீ ) தொலைவில் சென்றுள்ளது இந்த விண்கலம் இறுதியில் சூரியனின் மேல்பரப்பில் இருந்து சுமார் 4 மில்லியன் மைல் ( 6 மில்லியன் கி.மீ ) தொலைவில் பயணிக்கும். இது முந்தய எந்த விண்கலத்தையும் விட 7 மடங்கு சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும்.

சூரியனின் வளிமண்டல மேலெடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்க்காக இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளதப்பட்டுள்ளதாகவும், இன்னும் 6 ஆண்டுகள் சூரியனுக்கு நெருக்கமாக பறந்து 24 மணிநேரமும் சூரியனை கண்காணிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் நெருக்கமாக சூரியனை படம் பிடித்து சோலார் புரோப் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் எடுக்க பட்ட புகைப்படங்கள் சூரியனில் இருந்து சுமார் 27.2 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்தே எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது இந்த தூரத்தை விடவும் குறைவானது. பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலம் கண்டுபிடித்த தகவல்கள் குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறியதாவது, சூரியன் விண்வெளி வானிலை எவ்வாறு உருவாகிறது என்பது குறித்த புதிய விவரங்களை அளிக்கிறது, பூமியும் செயற்க்கைகோள்கள் மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றை தடுக்க கூடிய வன்முறை சூரிய காற்று குறித்து வானிலை ஆய்வாளர்கள் புரிதலை மாற்றியமைக்கிறது.

சூரியனை நெருங்க நெருங்க புதிய நிகழ்வுகளை, புதிய செயல்முறைகளை பார்ப்போம் என நிச்சயமாக நம்புகிறோம். நாங்கள் இதனை நிச்சயமாக செய்வோம் என கூறினார். மிக்சிகன் பல்கலைகழகத்தின் ஆய்வாளரும் பார்க்கர் ஆய்வின் சூரிய காற்றை உணரும் கருவியை உருவாக்கியவருமான ஜஸ்டின் காஷ்பர் கூறும் போது, விண்கலத்தை தழுவும் தனித்துவமான சக்திவாய்ந்த அலைகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இது கடலில் உள்ள முரட்டு அலைகளை போன்றது. அவை மிகப்பெரிய அளவிலான ஆற்றலை கொண்டுள்ளன. இது கொரோனா மற்றும் சூரிய காற்று எவ்வாறு சூடாகிறது என்பதர்கான எங்கள் கோட்பாடுகளை வியக்கத்தகு முறையில் மாற்றும் என்று கூறினார்.
நாசாவின் விஞ்ஞானி நிக்கோலா கூறியதாவது, நாங்கள் கண்டறிக தகவல்கள் எதிர்பார்த்ததை உறுதிப்படுத்தியுள்ளன. எதிர்பாராதவையும் நிகழ்ந்துள்ளது. ஆய்வாளர் ஒருவரின் கூற்றுப்படி, ஆய்வில் உண்மையிலேயே பெரிய ஆச்சரியங்கள் ஒன்று ,சூரிய காற்றின் வேகம் திடீர் கூர்முனைகளை கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது, காந்தப்புலம் அதனை சுற்றி கொண்டது. இது சுவிட்சபேக்குகள் என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு ஆகும் என்று கூறினார்