ஹாட் நடிகைக்கு கல்யாணமா!!! ”மாப்பிள்ளை சென்னை தான் ஆனா யாருனு, சொல்ல மாட்டேன்” ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டார்லிங் நிக்கி.
தான் சீரியஸ் ஆகா ஒருவரை காதலிப்பதாகவும், மூன்று வருடத்தில் திருமணம் செய்யவிருப்பதாகவும் நடிகை நிக்கி கல்ராணி ஓபன் டாக் விடுத்துள்ளார்.
2014 ம் ஆண்டு மலையாள படம் மூலம் அறிமுகமாகி தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நடிகை நிக்கி கல்ராணி, தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவருகிறார். தமிழில் டார்லிங், காஞ்சனா, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களில் பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை தன்வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் நடிக்கும் மலையாள படமான ‘தமாகா” படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க போது பத்திரிக்கையாளர் ஒருவர் உங்கள் காதல் வாழ்க்கை பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்க்கு , நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன்.ஆனால் அவர் யார் என்று தற்போதைக்கு சொல்ல முடியாது . என்றும் எப்போது கல்யாணம் என்ற கேள்விக்கு ,இன்னும் மூன்று வருடங்களில் அவரையே திருமணம் செய்ய விருப்பதாகவும் நிகழ்ச்சி மேடையிலேயே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஹாட்டான உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் கல்ராணிக்கு நிஜவாழ்வில் ஜோடியாக வருபவர் யார் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவருகின்றனர்.