நிர்பயா வழக்கில் கைதான குற்றவாளிகளின் கருணை மனு தள்ளுபடி!
ஓடும் பேருந்தில் கடந்த 2012ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை இந்தியாவையே கலங்கடித்தது. ஆறு பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணை சீரழித்து, கொலை செய்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக் ஷய் தாக்குர் ஆகிய ஐந்து பேரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும், டில்லி போலீசார் கைது செய்தனர். இவர்களில் ராம்சிங், திகார் சிறையில், 2013-ல், தற்கொலை செய்து கொண்டார். சிறுவனுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி, சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மற்ற நான்கு பேருக்கும், 2013, செப்டம்பரில், விரைவு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது, இந்த தீர்ப்பை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், உறுதி செய்தன.
இவ்வழக்கில் கைதான குற்றவாளிகளில் ஒருவர் வினை சர்மா நான்கு பேர் சார்பாக தண்டனையை குறைக்க கோரி டில்லி துணை நிலை கவர்னருக்கு கருணை மனு அளிக்கப்பட்டது. கவர்னர் அனில் பைஜால், கருணை மனுவை தள்ளுபடி செய்தார். தள்ளுபடி செய்யப்பட்ட மனு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.