“இது எனது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், எனது ஆசை இதுவல்ல” ரசிகர்களுக்கு நித்யாமேனன் கொடுத்த ஷாக் !!
தமிழ் சினிமாவில் நூற்றென்பது எனும் படத்தில் அறிமுகமானவர் நடிகை நித்யாமேனன், அதன் பிறகு காஞ்சனா 2, ஓகே கண்மணி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். கடைசியாக இவர் மிஷ்கின் இயக்கத்தில் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கிறார், இந்த படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் உடல் எடை கூடியதால் படவாய்ப்புகள் கிடைக்காததால் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான “தி அயர்ன் லேடி” யிலும் நடிக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க நித்யாமேனன், அங்கு தனது திரையுலக அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் எனக்கு சினிமாவில் நடிக்க, ஆரம்பத்தில் விருப்பம் இல்லை, எனது பெற்றோர்களின் கட்டாயத்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் தான் நன் சினிமாவிற்கு நடிக்க வந்தேன். காட்டில் சென்று மிருகங்களை புகைப்படம் எடுப்பது தான் எனது ஆசை. ஆனால் இப்போது சினிமாத்துறையில் வந்தது எனக்கு பெருமையை கொடுத்துள்ளது. எனது சினிமா வாழ்க்கை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. திருமணத்திற்கு பிறகு காதல் பிறப்பது போன்றது என மனம் திறந்து கூறினார்.