வடமாநிலத்தில் வெடிக்கும் வன்முறை.. குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு !! ரயில், இணைய சேவை முடக்கம் !!

December 11, 2019 at 3:13 pm
pc

வடமாநிலங்களில் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன வன்முறை வெடித்துள்ளது.

குடியுரிமை சட்ட மசோதாவுக்கு நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த மசோதாவில் வடமாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பாரம்பரிய நிலம், அகதிகளுக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது என்பது வடகிழக்கு மக்களின் அச்சம். தங்கள் இனத்தின் அடையாளத்தை பாதுகாப்பதில் தொடர்ந்து போராடுகிறவர்கள் வடகிழக்கு இன மக்கள். இதனால்தான் இம்மாநிலங்களில் இந்திய குடிமக்களாக இருந்தாலும் சிறப்பு அனுமதியோடு தான் உள்ளே நுழைய முடிவும் என்ற நடைமுறை உள்ளது. எனவே தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு வரப்போகும் செய்தியால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இதனால் அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. நேற்று 11 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இன்று பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கையில் தீப்பந்தங்களோடு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வி நிறுவனங்கள் ,வர்த்தக நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது .இதனிடையே போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளன. குறிப்பாக திரிபுராவில் மனுகாட் பகுதியில் போராட்டக்காரர்கள் திறந்திருந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறைக்காரணமாக திரிபுராவில் இணைய சேவை முடங்கியுள்ளது. இதனால் ஒருவர் படுகாயமடைந்தார்.செல்போன் குறுஞ்செய்தி சேவை ஆகியவை 48 மணிநேரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் போராடிவருவதால் ரயில் சேவையும் வட மாநிலங்களில் முடங்கியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website