முதியவரை அடித்து கொன்று விட்டு காய்கறியை திருடிச் சென்ற கொடூரன்
டெல்லி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவையை வாங்குவதற்கு மட்டுமே வெளியே வருகின்றனர். டெல்லியில் சஞ்சய் காலனி என்ற பகுதியில் வசித்துவரும் முதியவர் வெளியே சென்று காய்கறி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அதே பகுதியில் வசித்து வரும் நானி என்பவர் இந்த முதியவரிடம் இருந்து காய்கறியை பறித்து பறித்துச் செல்ல முயன்றுள்ளார்.
சண்டையில் முதியவரை பலமாக தலையில் அடித்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்தார். பிறகு அந்த நபர் காய்கறியை திருடிச் சென்றார். தலையில் காயத்தோடு கீழே விழுந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார். முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறந்த முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் முதியவரை தாக்கிய nanhe என்பவரை காவல்துறை தேடி வருகிறது.