பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 கோடி ரூபாய் வழங்கிய பவர் ஸ்டார்
தெலுங்கு திரைப்பட உலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண் பிரதமர் நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார் மேலும் ஆந்திரா தெலுங்கானா ஆகிய இரண்டு அரசுகளுக்கும் தலா 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார்.
இந்தியாவில் பெரும்பாலான அணைத்து மாநிலங்களும் 144 தடை உத்தரவால் முடங்கியுள்ளது இதனால் பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டத்தை குறைக்க அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் நெருக்கடியில் கஷ்டப்படும் மக்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.
தெலுகு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மக்களின் நலனுக்காக இரண்டு கோடி ரூபாய் வழங்கி உள்ளார். பிரதமரின் நிதியில் ஒரு கோடி ரூபாயும், ஆந்திரா தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு தலா 50 லட்சம் வழங்கியுள்ளார்.
இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆந்திரா தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது,