இந்தியாவுடன் பிங்க் -பால் டெஸ்ட் விளையாட தயார்- உறுதியளித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தனது ஒவ்வொரு தொடரின் போது பகல் இரவு டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவிலேயே நடத்திவருகிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணி கடந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது டெஸ்ட் போட்டியில் பிங்க் பாலில் விளையாட மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதன் முறையாக வங்கதேச அணிக்கு எதிரான பகல் -இரவு போட்டியில் பிங்க் பாலில் விளையாட சம்மதித்து விளையாடியுள்ளது. இதனால் 2020-2021 ம் ஆண்டு தொடரின் போது ஆஸ்திரேலியா அணி இந்தியாவுடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா அணி விளையாடுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆஸ்திரேலிய அணியின் தலைமை நிர்வாகியான கெவின் ராபர்ட்ஸ் கூறும்போது, 2020-2021ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா வரும் போது நிச்சயமாக ஒரு பிங்க் பால் தொடரில் விளையாடுவோம் என உறுதியளித்தார். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி சிறப்பாக விளையாடிவருவதால், அவர்கள் 2021ம் ஆண்டின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.