கூட்டணி தர்மம்னா அப்படித்தான் மத்தபடி நாங்க ஸ்டெடியா இருக்கோம் ராமதாஸ் திட்டவட்டம் !!

December 14, 2019 at 11:04 am
pc

கூட்டணி தர்மத்திற்காகவே குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவர்களிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமானதால் வட மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழ்நாட்டிலும் மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்த பாமக நிறுவனர் ராமதாஸிடம் செய்தியாளர்கள், இலங்கை தமிழர்களை அங்கீகரிக்காத இந்த மசோதாவுக்கு பாமக ஆதரவு அளித்துள்ளதை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

NEW DELHI, OCT 10 (UNI):-PMK Founder President S Ramadoss and his son and Rajya Sabha Member Anbumani Ramadoss calling on Prime Minister Narendra Modi, in New Delhi on Thursday. UNI PHOTO CH 2 U

அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி கட்சி என்றால் ஆதரித்து தான் ஆகவேண்டும். கூட்டணி தர்மத்திற்காக தான் ஆதரித்தேன். பாமக நிலைப்பாட்டில் மற்றபடி மாற்றங்கள் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதில் நங்கள் உறுதியாக உள்ளோம். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் நாங்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இருப்பதாக அர்த்தமில்லை என கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website